உங்கள் கணினியின் திரையை தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வாறு நீட்டுவது ? ( Extend your Computers Display to a TV )

பல வேளைகளில் இருக்கிற ஒரு கணினி திரை நமக்கு போதுமானதாக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு,

1 . கணினியில் திரைப் படம் பார்க்கும் போது வேறு வேலை எதுவும் செய்ய முடிவதில்லை.

2 . கணினியில் படங்கள் கொண்ட கோப்புறையை நோக்கும் போது படங்களை பெரிதாக்கிப் பார்ப்பது.

3. ஒரே நேரத்தில் பல மென் தொகுப்புகளை உபயோகிக்கும் போது window ஐ மாற்றிக் கொண்டே வேலை செய்வது.

இந்த மாதிரி தருணங்களில் இன்னொரு திரை நமது கணினிக்கு இருந்தால் நல்லது என்று தோன்றும்.

உண்மையிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட திரைகளை நமது கணினிக்கு சேர்க்க முடியும் என்றாலும், பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு அவை உபயோகமாக இருக்காது.

எனவே இருப்பதை வைத்து எவ்வாறு நமது கணினித் திரையை தொலைக் காட்சிப் பெட்டிக்கு எவ்வாறு நீட்டுவது என்று பார்ப்போம்.

உங்கள் கணினியில் கீழே உள்ளது போல் socket ஐ பார்த்துக் கொள்ளவும்.





இதில் S-Video என்று உள்ள socket தான் நமக்கு உபயோகப் படும். கடைகளில் இதே போல் உள்ள socket cable ( 7- pin ) with Video in to TV. சில cable இல் Audiocable கூட சேர்ந்து இருக்கும்.

இந்த மாதிரி இல்லைஎன்றால் உங்கள் கணினிக் கேற்றவறு cable ஐ தேர்ந்து எடுக்கவும்.

இதை வாங்கி உங்கள் கணினியிலிருந்து தொலைக் காட்சிக்கு இணைத்து விடவும்.

பிறகு தொலைக் காட்சியை தொடக்கி AV mode க்கு வரவும்.

உங்கள் கணினியின் Display properties சென்று Connect to a Projector என்று தேர்ந்தெடுக்கவும்.




இதில் நான்கு தெரிவுகள் வரும்.

1 .Computer only.
2. Duplicate.
3. Extend.
4.External monitor only.

இதில் Duplicate என்றால் கணினியில் தெரிவது அப்படியே உங்கள் தொலைக் காட்சியில் தெரியும்.



Extend எனும் தெரிவு உங்கள் தொலைக் காட்சியை கணினியின் திரையோடு உபயோகிக்க எதுவாக இருக்கும்.

ஒரு திரையிலிருந்து மற்றொரு திரைக்கு ஒரு window ஐ கொண்டு செல்ல Titlebar இல் Drag செய்து தொலைக் காட்சியில் drop செய்ய வேண்டும்.

உங்கள் கணினி மற்றும் தொலைக் காட்சியின் இடத்துக்கு ஏற்றவாறு Display இல் set செய்யவும்.



0 comments: